உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிவருக்கும் மூன்றாவது படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் தான் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த வாய்ப்பு காளிதாஸ் ஜெயராமுக்கு கிடைத்திருக்கிறது.
டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம் அஸ்வின். எடுத்த எடுப்பிலேயே அஸ்வினுக்கு மூன்று பட வாய்ப்பு கிடைத்ததை பார்த்த ரசிகர்களோ, அவர் மச்சக்காரன் என்கிறார்கள்.
இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் காதல் கதை கொண்ட படத்தில் அஸ்வினை தான் ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் கிருத்திகா படத்தில் அஸ்வின் நடிக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
அந்த படத்தில் அஸ்வின் அல்ல மாறாக பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தான் ஹீரோவாக நடிக்கிறார். சிவாவை வைத்து வணக்கம் சென்னை படத்தை எடுத்து கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா.
முதல் படத்தையே வித்தியாசமாக எடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். அதன் பிறகு விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து காளி படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார் கிருத்திகா.
நல்ல நடிப்புத் திறமை இருந்தும் ஒரு பிரேக் கிடைக்காமல் இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருக்கு கிருத்திகாவின் படம் மூலம் புதிய அடையாளம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கிருத்திகா இயக்கவிருக்கும் படத்தை அவரின் கணவர் உதயநிதி தயாரிக்கவில்லையாம்.
இதற்கிடையே முதல்முறையாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுவிட்டார். திரையுலகை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றதில் கோலிவுட்காரர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
பலரும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். காளிதாஸும் தன் தந்தையுடன் சென்று ஸ்டாலின் மற்றும் உதயநிதியை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.