பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Date:

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் உரிமையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதே ரிலீஸ் தள்ளிப் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.

படம் குறித்த அறிவிப்பை முதலில் வெளியிட்ட போது அது தொடர்பான போஸ்டர்களில் பொங்கல் வெளியீடு என குறிப்பிட்டது லைகா நிறுவனம். அதற்கு பின்பு வெளியான பாடல் மற்றும் அதனை விளம்பரப்படுத்த வெளியிட்ட வீடியோ பதிவுகள், எக்ஸ் பதிவுகள் என அனைத்திலுமே பொங்கல் வெளியீட்டை எடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்