யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டி பகுதியில் உள்ள நகை உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குறித்த நபர் வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்கு சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார்.

குறித்த விடயத்தை தாய்க்கு தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து, மயக்கமடைந்த தந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சயனைட் அருந்தியதால் அவரது மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்