“நீ ஏழையா இரு இல்லனா பணக்காரனா இரு, யாரா வேணா இரு, ஆனா இந்த கொரோனா கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு…” என்று கொரோனா நமக்கு அறிவுறுத்தும் வகையில் இருக்கிறது நம்ம லட்ச்சனம்.
பாகுபாடின்றி என அனைவருமே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது. கோலிவுட்டில் விஷால், தமன்னா, நிக்கி கல்ராணி,SPB, விஜயகாந்த், சுந்தர் C, பாண்டு, கே. வி. ஆனந்த் மற்றும் பாலிவுட்டில் அமிதாப், அபிஷேக், ஐஷ்வர்யா ராய், அமிர்கான், தெலுகு திரைப்பட உலகில், ராஜமௌலி, சிரஞ்சீவி போன்ற பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்துதெலுகு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ஜுனியர் NTR என இன்று கால்வாசி நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு பிரிய, உலகமே அச்சத்தில் உள்ளது. அந்த அச்சத்தில் இருந்து விடுபட கொரோனா தடுப்பூசி போடவேண்டும்.
நடிகர்கள் பிரபலங்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டிருக்க, அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார் ரஜினி. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். இத்தகவலை அவருடைய மகள் செளந்தர்யா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.