ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேள தாளத்திற்கு நடனமாடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹொரண பிரதேசத்தில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றவர்களின் தாளத்துக்கு நடனமாடும் கட்சியல்ல என்றார்.




