எல் நினோ தாக்கம்: மஹா பருவ விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் — ஐ.நா. எச்சரிக்கை

Date:

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து, கடந்த 29.08.2026 அன்று சாய்ந்தமருது பிரதான வீதிப் பகுதியில் உள்ள உணவு கையாளும் நிறுவனங்களில் வழமையான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த இறைச்சி உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட முறையில் கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழும் பெறப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் குறித்த இறைச்சி கையகப்படுத்தப்பட்டு, இறைச்சிக் கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும், இச்சம்பவத்தைத் திரிபுபடுத்தி, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், உண்மைக்குப் புறம்பான இத்தகவல்கள் ஏதோவொரு உள்நோக்கத்துடன் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை எனவும், உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ, பிறருக்கு பகிரவோ வேண்டாம் எனவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2027 துப்பாக்கி உரிமம்: புதுப்பிப்பு நாளை முதல்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (செப்டம்பர் 1)...

பிரபல தென்னிந்திய நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக்...

கல்முனை, சம்மாந்துறையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்