முத்தரப்பு ஒருநாள் தொடர்: இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை விரட்டியடித்தது இலங்கை!

Date:

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த மெகா இலக்கை, இலங்கை விரட்டியடித்தது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் இங்கிலாந்து அணியை, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டொம் பாண்டன் 50 ஓட்டங்களையும், பென் டக்கெட் 29 ஓட்டங்களையும் பெற்று நல்ல தொடக்கத்தை வழங்கினர்.

தொடர்ந்து வந்த ஜோ ரூட் 69 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மத்திய வரிசையில் ஜோடி சேர்ந்த அணியின் தலைவர் ஹரி ப்ரூக் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அசுர வேகத்தில் உயர்த்தினர்.

இறுதிவரை அதிரடியை வெளிப்படுத்திய ஹரி ப்ரூக் 116 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் அடங்கலாக 202 ஓட்டங்களை அதிரடியாக குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆட்டமிழக்காமல் நின்ற வில் ஜேக்ஸ் வெறும் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அசித பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இலங்கை, 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 430 ஓட்டங்களை பெற்றது.

அவிஷ்க பெர்னாண்டோ 97, பவன் ரத்னாயக்க 130, தசுன் சானக 97 ஓட்டங்களை பெற்றனர்.ஜனித் லியனகே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்