மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் இரு பக்கமும் இறந்த கால்நடைகள், மீன் கழிவுகள், கோழிக்கழிவுகள் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுகின்றதுடன் துர்நாற்றம் வீசுகின்றதால் இந்த வீதியால் பிரயாணிக்கும் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வீதியின் இரு பக்கமும் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை அகற்ற மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் சகிதம் கள வியையம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (31) மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் தகரங்கள் மற்றும் வீட்டு கழிவுகள் உட்பட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது இந்த குப்பைகளை மாதக்கணக்கில் அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுகின்றதுடன் மாவட்ட செயலகத்திற்கு செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு இந்த வட்டாரத்துக்கு தெரிவான உறுப்பினர் இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் உள்ளதுடன் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றி பெற்றால் வாங்கும்; சம்பளத்தை கல்விக்கு செலவு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
எனவே வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் வாக்களித்த மக்களுக்காவது குறைந்த பட்சம் புதிய மாவட்டத்திற்கு செல்லும் பாலமீன்மடு வீதி இரு பக்கமும் உள்ள குப்பைகளை அகற்றி மக்கள்; மூக்கை பொத்திக் கொண்டு பிரயாணிகாத வகையில் சென்று வரக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுங்கள்.
அதேவேளை வடக்கு கிழக்கில் பருவபெயர்ச்சி மழை ஜப்பசி மாதத்தில் இருந்து பெய்ய தொடங்கும் நேபாளத்தில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்று இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் மாவட்டத்தில் மயிலம்பாவெளி தன்னாமுனை, சத்துருக்கொண்டான், குப்பிளாமடு போன்ற வீதி வடிகான்கள் ஊடாக வரும் மழை நீர் புதிய மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள திராய்மடு முருகன் கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள வீதியின் பாலத்தின் ஊடாக பாலைமீன்மடுவில் இருக்கும் கட்டுக்குடாமடுவை சென்றடைந்து ஊரிமடு ஊடாக கடலுக்கு செல்லும்
இந்த மழைநீர் செல்லும் வடிகான்கள் புல்கள் வளர்ந்தும் மரங்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கிறது இதனால் மதகு மற்றும் வடிகாண்கள் அடைத்துள்ளதால் மழைநீர் வழிந்தோட முடியாதுள்ளது
எனவே மழை வரும் முன்னர் இந்த மழைநீர் வழிந்தோடும் வடிகான்களை மாநகரசபை துப்பரவு செய்ய வேண்டும் இல்லாவிடில் மழை வெள்ளத்தில் பாலமீன்மடு கிராமம் பாதிக்கப்படும் எனவே இதனை கவனத்தில் கொண்டு வரும் முன் காப்போம் என்றதற்கு அமைய இந்த வடிகான்களை துப்பரவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




