யாழில் இருவருக்கு மரணதண்டனை

Date:

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.

குறித்த 09 நபர்களையும், எதிரிகளாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 28 ஆம் திகதி தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்ட வேளை, 09 ஆம் எதிரி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால், 09 ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08 எதிரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த 2014 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால், இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்