செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என நவம்பர் 16ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தனர்
மேலும் தெரிவிக்கையில்
செம்மணி மனிதப் புதைக்குழியில், 110 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் 583 மனித எலும்புக் எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
அவ்வாறான நிலையில் பேராசிரியர் ராஜ சோமதேவா நீதிமன்றத்திற்கு ஒரு இடைக்கால அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருக்கின்றார்.
அந்த அறிக்கையானது எந்தவிதமான ஆய்வுகளோ, மரபணு பரிசோதனைகளோ அல்லது தொல்லியல் தடவியல் சம்பந்தமான எந்தவித ஆய்வுகளோ மேற்கொள்ளாது. அதொரு மனித புதைக்குழி என்றதையேயும் குறிப்பிடாமல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கின்றார்.
நாம் அதை முற்றாக நிராகரிக்கின்றோம். இனப்படுகொலை யின் சாட்சியமான பெரும் மனித புதைக்குழியாக செம்மணி மனித புதைக்குழி காணப்படுகிறது.
எனவே கடந்த காலங்களில் போன்று கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி, சதோச மனித புதைக்குழிகள் போன்ற புதைக்குழிகளை இவரே மூடியிருக்கின்றார்.
எனவே நாம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம். புதைகுழி அகழ்வில், சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட வேண்டும், சர்வதேச நீதி கோருவதற்காக சர்வதேசத்தின் தடவியலாளர்களை இங்கு கொண்டுவரப்பட்டு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு பரிசோதனைகளை ஒரு சர்வதேச கண்காணிப்பின் ஊடாகவே அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறோம்.
அதனை தொடர்ந்து வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி மாலை 2 மணிக்கு செம்மணி மனித புதைக்குழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும். சர்வதேச விசாரணை மூலமாகவே எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்
இனப்படுகொலையின் பெரிய சாட்சியாகின்ற இந்த மனித புதைக்குழிக்கு நாம் சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒன்று திரண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் இந்த இடத்திலே கூற விரும்புகின்றோம்.
எனவே நாம் தொடர்ச்சியாக இந்த செம்மணி மனித புதைக்குழிக்காக சர்வதேச நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ச்சியாக போராடுவோம்.
எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.




