செம்மணி எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை செய்வதில் எமக்கு நம்பிக்கையில்லை: காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க செயலாளர் ஜெனிதா!

Date:

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவுக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்புவதில் எமக்கு நம்பிக்கையில்லையென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிதா தெரிவித்துள்ளார்.

சிந்துபாத்தி மயான அகழ்வு தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாகவும், அதற்கு எதிராக போராடப் போவதாகவும் செய்தியாளர் சநதிப்பை அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரிதிநிதிகள்  மேற்கொண்டிருந்தனர்.

இந்த அகழ்வு விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையெனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இது தொடர்பில், சிவானந்தம் ஜெனிதாவை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு, ஏன் காபன் பரிசோதனையை வலியுறுத்தவில்லையென வினவியது.

காபன் பரிசோதனையை மேற்கொள்வது, மனித எச்சங்களின் காலப்பகுதியை அறிந்துகொள்ளும் அதிகபட்ச நம்பிக்கை கொண்ட ஒரு விஞ்ஞானபூர்வ செயல்முறையல்லவா என தமிழ்பக்கம் வினவியது.

அகழ்வு பற்றிய இடைக்கால அறிக்கையில் செம்மணி புதைகுழியென்ற சொற்றொடர் நீக்கப்பட்டிருந்ததற்கு எதிராக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகளால் யாழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தில் காபன் பரிசோதனை கோரப்பட்டிருக்கலாம் என சிவானந்தம் ஜெனிதா குறிப்பிட்டார்.

எனினும், அது தொடர்பில் வெளியான ஊடக செய்திகளில் காபன் பரிசோதனை கோரப்பட்டதாக தகவல் இருக்கவில்லையென தமிழ்பக்கம் சுட்டிக்காட்டிய போது, அது சட்டத்தரணிகளுடன் தொடர்புடைய விவகாரம் என ஜெனிதா குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சார்பில்தானே சட்டத்தரணிகள் முன்னிலையாகிறார்கள், காணாமல் ஆக்கபபட்டவர்களின் சங்கங்கள்தானே இந்த விவகாரத்தை கையாள வேண்டுமென தமிழ்பக்கம் குறிப்பிட்ட போது, தமக்கு காபன் பரிசோதனையில் நம்பிக்கையில்லையென சிவானந்தம் ஜெனிதா குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் டிஎன்ஏவை சேமித்து, எச்சங்களின் டிஎன்ஏயை ஒப்பிட்டு, தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்தார்.

“காபன் பரிசோதனையில் எமக்கு நம்பிக்கையில்லை. மன்னார் சதொச புதைகுழி விவகாரத்திலும் இப்படித்தான் காபன் பரிசோதனைக்கு அனுப்பி, அது தொன்மையான புதைகுழி என முடித்து விட்டார்கள். அமெரிக்காவுக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பிய எச்சமொன்றை காணவில்லையென சொன்னார்கள். அது தொன்மையான எச்சங்களெனில் அதற்குள் 1985 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட பிஸ்கட் உறை எப்படி வந்தது? கொக்குத்தொடுவாய் புதைகுழியையும் இப்படித்தான் புலிகளின் உடல்கள் என முடித்து விட்டார்கள்“ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மன்னாரில் இராணுவ ஜீப் விபத்து: ஒருவர் பலி

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வேகமாக வந்த இராணுவம் பயணித்த வாகனம்...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய...

காட்டு யானைகள் அட்டகாசம்- நயினாகாட்டில் ஒருவர் உயிரிழப்பு- சதோச களஞ்சியம் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்