சில்லென குளிரும் இலங்கை!

Date:

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மூன்று மாகாணங்கள் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களில் மழை மற்றும் காற்றின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்ததுடன், மேகமூட்டமான காலநிலையே பெரும்பாலான பகுதிகளில் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்