அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான தனுஷ்கா குணதிலக, கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சசெக்ஸ் ஸ்ட்ரீட் ஹோட்டலில் கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.
ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் 29 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் பொலிஸ் ஏரியா கட்டளை மையம் ஆகியவற்றின் துப்பறியும் நபர்கள் கூட்டு விசாரணையை தொடங்கினர்.
நவம்பர் 2ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஒன்லைன் டேட்டிங் செயலி மூலம் அந்த பெண் குணதிலகாவுடன் பல நாட்களாக செய்திகளை பரிமாறிக்கொண்டதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஜோடி புதன்கிழமை சந்தித்தது. அப்போது தனுஷ்கா குணதிலக அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொலிஸ் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட முகவரியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
தனுஷ்கா குணதிலக சிட்னி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமைஎநீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.



