முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

Date:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம்...

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 36ஆவது ஆண்டு நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்