ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

Date:

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை (OIC) பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் (IGP) நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், முன்தினம் (28) இரவு இந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைய, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கடமைகளைக் கவனிப்பதற்காக மற்றுமொரு அதிகாரியை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்தினம் (28) கைது செய்யப்பட்டார். அவர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 12-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றுமொரு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும்...

மயிலத்தமடு – மாதவனை விவகாரம்: நவம்பர் 2இல் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்