36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

Date:

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (30.10.2026) 28 ஆவது வாரமாகவும் தொடர்ந்தது.
மயிலிட்டி கொமாண்டோ பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று நடைபெற்ற இப்போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுத் தமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
குறிப்பாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய மக்கள், 36 ஆண்டுகள் கடந்தும் தமது பூர்வீக வாழிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்ந்து வருவது பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், தமது குடியிருப்புக் காணிகள் மட்டுமன்றி விவசாய நிலங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய சொத்துக்களையும் இழந்துள்ள மக்கள், நீண்டகாலமாக அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காகப்பல்வேறு கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மயிலிட்டி மக்களின் நில உரிமைப் பிரச்சினைக்கு இனியும் காலதாமதமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், காணி விடுவிப்பு தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்