கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமனம் : தேசிய சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்காரவினால் நியமனக் கடிதம் கையளிப்பு

Date:

கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்காரவினால் குறித்த நியமனத்திற்கான உத்தியோகபூர்வக் கடிதம் கடந்த 2026.11.01ஆம் திகதி மீரிகம தேசிய சாரணர் பயிற்சி நிலையத்தில் வைத்து மேஜர் கே. எம். தமீமிடம் கையளிக்கப்பட்டது.

கல்முனை சாரணிய மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியையும், சாரணிய இயக்கத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

சாரணிய இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களான தலைமைத்துவம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய பண்புகளை இளைஞர்கள் மத்தியில் வளர்ப்பதில் மாவட்ட ஆணையாளரின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

அந்தவகையில், மேஜர் கே. எம். தமீமின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை சாரணிய மாவட்டத்தின் செயற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படுவதுடன், சாரணர்களின் ஆளுமை விருத்தி, தலைமைத்துவப் பயிற்சி, ஒழுக்க மேம்பாடு, சமூக சேவை மற்றும் இளைஞர்களுக்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் கே. எம். தமீமுக்கு கல்முனை சாரணிய மாவட்டத்தின் சாரணர்கள், சாரணியத் தலைவர்கள், முன்னாள் சாரணியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்