சமத்துவ கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

Date:

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளான இன்று, சமத்துவக் கட்சியின்
தலைமை அலுவலகத்தில் உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் மண்ணிலும் ஏனைய பகுதிகளிலும்
கொடூரமாகக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நினைவாக
முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சமத்துவக்கட்சியின்
கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, போரில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாகப்
பொதுச்சுடரை வரதராஜா ஐயா ஏற்றி வைத்தார். தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் நினைவு படத்திற்கான சுடரினை ஏற்ற ஏனையவர்கள் ஏனைய சுடர்களை
ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தினார்கள். அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இறுதி யுத்தக் காலத்தில் தமிழ் மக்களின் பசியைத் தீர்த்த
போர்க்கால உணவின் குறியீடான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சப்பட்டு,
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

முன்னாள் போரைாளியான பாலன் மாஸ்ரர் தலைமையில் இடம்பெற்ற இந்த
நினைவேந்தல் நிகழ்வில் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் முன்னாள் போராளிகள்,
கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு போரில்
கொல்லப்பட்ட உறவுகளுக்குத் தங்களின் அஞ்சலியைச் செலுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்