ரஜினி – கமல் சேர்ந்து நடிக்​கும் படம்: புரமோ ஷூட் தொடங்கியது

Date:

ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்க இருக்​கிறார். ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார்.

இப்​படத்தை கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது. இதன் படப்​பிடிப்பு ஏப்​ரலில் தொடங்​கும் என்​கிறார்​கள். இதையடுத்து ரஜினி​யும் கமல்​ஹாசனும் இணைந்து ஒரு படத்​தில் நடிக்க இருக்​கின்​றனர். ரஜினி​ காந்​தின் 174வது படமான இது, கமல்​ஹாசனுக்கு 238வது படம்.

இது தொடர்​பான தகவல் ஏற்​கெனவே வெளி​யாகி இருந்​தது. ‘சரியான கதை அமைந்​தால் சேர்ந்து நடிப்​போம்’ என்று ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் கூறி​யிருந்​தனர். 40 வருடங்​களுக்​குப் பிறகு இரு​வரும் இணைந்து நடிக்க இருப்​ப​தால் ரசிகர்​கள் மத்தியில் படத்​துக்கு எதிர்​பார்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், இவர்​கள் இணை​யும் படத்தை நெல்​சன் திலீப்​ கு​மார் இயக்க இருக்​கிறார்.

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது. இந்​தப் படத்​துக்​கான புரமோ வீடியோ படப்​பிடிப்பு சென்னை பிர​சாத் ஸ்டூடியோ​வில் நேற்று தொடங்​கி​யுள்​ளது. இன்றும் இதன் படப்​பிடிப்பு நடக்​கிறது. இதில் இசை அமைப்​பாளர் அனிருத், நெல்​சன் திலீப்​கு​மார் ஆகியோர் பங்கேற்​கிறார்​கள்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்