‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நளினியை மாற்றச் சொன்னார்கள் – டி.ராஜேந்தர் தகவல்

Date:

டி.ராஜேந்தர் இயக்​கத்​தில் நளினி நாயகி​யாக அறி​முகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்​கா, ராதா ரவி, எஸ்​.எஸ்​.சந்​திரன், கவுண்​டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்​தனர். 1983ஆம் ஆண்டு வெளி​யான இப்​படம் சூப்பர் ஹிட்​டானது.

படத்​தில் இடம் பெற்ற இந்​திரலோகத்து சுந்​தரி, வைகைகரை காற்றே நில்​லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்​களும் வெற்​றி​பெற்​றன. இந்​நிலை​யில், இப்​படம் 43 வருடங்​களுக்​குப் பிறகு 4கே டிஜிட்​டல் தொழில்நுட்​பத்​தில் பெப்.13ஆம் திகதி மீண்​டும் ரிலீஸ் ஆகிறது. இதற்​கான விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ்​.​தாணு, இயக்​குநர் விக்ரமன், ஆர்​.கே.செல்​வ​மணி, ராதா​ர​வி, நளினி ஆகியோர் கலந்து கொண்​டனர். விழா​வில் டி.​ராஜேந்​தர் பேசும்​போது, “இப்​படத்​தின் படப்​பிடிப்பை முடித்​து​விட்டு ஒரிஜினல் காப்​பியை பைனான்​சி​யர்​களுக்கு போட்டு காண்​பித்​தேன்.

ஜெமினி லேபில் படத்​தைப் பார்த்து விட்​டு, நளினி, கதா​நாயகி​யாக சரி​யாக வரமாட்​டார்; அவருக்கு ‘நீட்டு முகம்’ என்று அவரை மாற்​றச் சொன்​னார்​கள். ஆனால், அவரை கதா​நாயகி​யாக்கி படம் எடுத்​தேன். 4 ஆயிரம் அடி பிலிம் வாங்​கி, நீட்டு முகம் என்ற சொன்​னவர்​களிடம் அவரை ‘நீட்’ முக​மாக மாற்​றினேன். நளினி​யின் தலை​முடியை விரித்​துப் போட வைத்​து, பேக் லைட்​டில் வைத்து படமாக்கினேன்.

அந்த பேக் லைட் தான் என் கதா​நாயகி​யின் ஹைலைட். பிறகு அவர்​களுக்கு மீண்​டும் படம் போட்​டுக் காண்பித்தேன். படத்​தைப் பார்த்து விட்​டு, நீட்டு முகம் என்று யார் சொன்​னார்​களோ, அவர்​களே கைதட்டினார்கள்.

இதை என் திறமைக்​காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்​ல​வில்​லை. வாழ்க்​கை​யில் யார், எப்​போது, எப்​படி வரு​வார்​கள் என்​பது யாருக்​கும் தெரியாது, ஆண்​ட​வனுக்​குத்​தான் தெரி​யும் என்​ப​தற்​காகத்​தான் சொல்​கிறேன்” என்​றார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்