முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

Date:

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், காலியில் உள்ள கரபிட்டிய போதனா மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை (19) உயிரிழந்தார்.

இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடலை தனமல்விலவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த தேஷானி குணரத்னவின் கணவரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமார, கடந்த காலத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் சுமத்தப்பட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ். பொதரகம, அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். அவரது கடவுச்சீட்டைத் தடைசெய்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு ஏற்பட்ட விபத்து குறித்த முதற்கட்ட விசாரணைகள் தற்போது தொடங்கியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்