திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

Date:

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு உலர் உணவு விநியோகித்த விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்தே ரூ. 1,235,000 இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.

குறித்த பணத்தைச் நேரடியாகப் பெறாமல், பிறிதொரு சிறைச்சாலை அதிகாரி மூலமாகப் பெறுவதற்கு உதவி அத்தியட்சகர் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்