தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே மற்றும் பிள்ளையான என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரே என்பதை அசாத் மௌலானா வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



