செம்மணி புதைகுழியிலிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படுகிறது!

Date:

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு இன்று (09) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆய்வின் போது, புதைகுழியினுள் மழையால் தேங்கி நின்ற வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுநீர் அகற்றும் பவுசர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த இடத்தின் தற்போதைய நிலமைகளை நேரில் பார்வையிட்ட நீதவான் எஸ். லெனின்குமார், எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி அடுத்த வழக்கு விசாரணைகாக திகதியிட்டார். அன்றைய தினமே புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

இதனிடையே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட பாதீட்டையும் இன்று (09) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்