காயங்களுடன் முதியவரின் சடலம்

Date:

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணபதிபிள்ளை யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று காலை 8.00 மணியளவில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்

இதனை தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...

வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு: சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியொருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்