கிளிநொச்சியில் இளம்தாயின் உயிரை பலியெடுத்த “புள்ளிங்கோ“க்கள்

Date:

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்
இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே
மரணித்துள்ளார்.

உருத்திரபுரத்தில் இருந்து கரடிப்போக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது, கரடிப்போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களே் மோதியதில் குறித்து விபத்து
ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில், பாடசாலை முடியும் நேரத்தில் அந்த வீதியில் வேகமாக ஓடிதிரிந்தாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் குறித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் ஊடகவியலாளருக்கு மிரட்டல்

வாழைச்சேனையில் வீட்டுக்கு சென்ற 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ்...

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்