Pagetamil
இலங்கை

யாழில் வீதியின் மறுகரையில் நின்ற யுவதியை மோதிக்கொன்ற இராணுவ வாகனம்: பிறந்தநாளில் பலியான சோகம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.

வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

புத்துர் – மீசாலை வீதியில் வீரவாணி சந்தியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

யுவதி உறவினர் வீட்டில் பால் கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது, வீரவாணி சந்தியில், வீதியை கடப்பதற்காக வீதியோரம் நின்றுள்ளார்.

இதன்போது, யுவதி நின்ற கரைக்கு மறுகரையாக- எதிர்திசையில் இருந்து புத்தூர் சந்தியிலிருந்துஇராணுவ வாகனம் வந்தது. வீதியின் இடது கரையில் சென்ற இந்த வாகனம் வீதியின் வலதுகரையில் நின்ற யுவதியை மோதி, மரத்திலும் மோதி கவிழ்ந்தது.

விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

முழு உலகத்துக்குமான ஆன்மீக தலைவராக பணியாற்றியவர் பாப்பரசர்

Pagetamil

யாழ் மாநகரசபை தேர்தலில் யாரை ஆதரிப்பதென விரைவில் அறிவிப்போம்: மணிவண்ணன்!

Pagetamil

தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகிறதா?: மணிவண்ணன் சந்தேகம்!

Pagetamil

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment