ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகொப்டர் கடுமையான மூடுபனியில் மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதில் இறந்ததாக நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு தொலைக்காட்சி திங்களன்று உறுதி செய்துள்ளது.
கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் சேதங்கள், உடல்களளை தேடுதல் குழுக்கள் கண்டறிந்த பின்னர் அவர்களின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
“ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஹெலிகொப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் விபத்தில் கொல்லப்பட்டனர்” என்று ஈரானிய மூத்த அதிகாரி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் இறப்புகளை உறுதிப்படுத்தியது, “ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் இருந்த அனைத்து பயணிகளும் வீரமரணம் அடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தில் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோல்லாஹியன் பயணித்த ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்ததாக ஈரானிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
The first footage of the presidential helicopter as seen on a drone screen. Nothing is left but the tail. pic.twitter.com/p6fLksA6ce
— Ali Hashem علي هاشم (@alihashem_tv) May 20, 2024
விமானம் ஒரு மலை உச்சியில் மோதியதை தளத்தில் இருந்து படங்கள் காட்டுகின்றன, இருப்பினும் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பெல் 212 ஹெலிகாப்டரில் ரைசி பறந்து கொண்டிருந்ததாக அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
63 வயதான ரைசி, 2021 இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



