சர்ச்சைகளில் சிக்கும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு கரந்தெனிய இளைஞர்கள் குழுவொன்று தபால் மூலம் 300 ரூபாவை அனுப்பி வைத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மனைவியை வழியனுப்ப சென்றபோது, சர்ச்சையில் சிக்கினார். அங்கு பணிபுரியும் போர்ட்டர் ஒருவரை தாக்கியிருந்தார்.
வெளிநாடு சென்ற அமைச்சரின் மனைவியின் பார்சல்களை சுமந்து செல்வதற்காக 1000 ரூபாவிற்கு பதிலாக 700 ரூபாவையே அவர் வழங்கியிருந்தார். போர்டர்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1000 என அங்கு அறிவித்தல் பலகைகள் உள்ளன.
எஞ்சிய ரூ.300ஐ அந்த போர்டர் கேட்டபோது, பிரசன்ன ரணவீர அவரை தாக்கினார். இதற்காக அமைச்சர் பின்னர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து, கரந்தெனிய பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று, ரூ.300 ஐ இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுமைதூக்குபவருக்கு செலுத்த வேண்டிய ரூ.300 ஐ கொடுத்து விடுங்கள் என குறிப்பிட்டே, தபால் கட்டளை மூலம் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



