சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

Date:

சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் ரம்யா (33), காரமடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் கடந்த மாதம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பால்கனி கூரையில் வெங்கடேஷ்-ரம்யா தம்பதியின் 7 மாத குழந்தை தவறி விழுந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவை காரமடைபெள்ளாதி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் ரம்யா வந்திருந்தார். அவரது பெற்றோர் நேற்றுமுன்தினம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரம்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக காரமடை போலீஸார் வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் கூறும்போது, “குழந்தை தவறிவிழுந்த சம்பவத்தில், தாயான ரம்யாவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அக்கம்பக்கத்தில் வசிப்போரும் கண்டித்துள்ளனர். இதனால் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான ரம்யா, பெற்றோர் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை யூடியூபர் நயோமிசான் ஜப்பானில் திடீர் மரணம்: பிரசவத்தின்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஜப்பானில் வசித்து வந்த இலங்கை சமூக ஊடகப் பிரபலமான நயோமி (Nayomichan),...

ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துவோரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மற்றும் பாரிய...

இலங்கையின் தேசிய பூங்காக்களில் பிகினி புகைப்படப் படப்பிடிப்புகள்? விசாரணை ஆரம்பம்

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி ஆடைகளில் புகைப்படப் படப்பிடிப்புகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்