ரம்பேவ பேருந்து விபத்தில் 5 பேர் பலி

Date:

இன்று (10) காலை, அனுராதபுரம் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் (A9), மதவாச்சி – ரம்பேவ பகுதியில் மூன்று பயணிகள் பேருந்துகள் மோதிக்கொண்டதில் பயங்கரமான வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும், தனியார் பேருந்து ஒன்றும் அடங்குமென பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 50 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது அனுராதபுரம், மதவாச்சி மற்றும் ரம்பேவ ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்