இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்ட உரையாடலை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் தற்போதைய சூழ்நிலையின் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மக்கள், குறிப்பாக ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.