இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Date:

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் வந்த தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் பூரணகும்பம் வைத்து தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றார்.

அதனை தொடர்ந்து நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.முத்து ஸ்ரீநீவாக குருக்கள் மற்றும் திருநெல்வேலி நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் தேவஸ்த்தானம் சிவஸ்ரீ.சதா.சிவகுமாரக் குருக்கள், பிரம்மஸ்ரீ.சிவஆனந்தகிருஸ்ண சர்மா ஆகியோர் மாலை அணிவித்து ஆதீனத்தை வரவேற்றனர்.

தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் மற்றும் நல்லூர் வடக்கு ஸ்ரீசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் ஆலய அறங்காவலர்கள் மற்றும்
லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய இணை ஸ்தாபகர் கலாநிதி.அப்பையா தேவசகாயம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி ஆதீனத்தை வரவேற்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்