இடைநீககம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இன்று நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டன. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. அதே நேரத்தில் 73 எம்.பி.க்கள் வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான், அஜித் பி. பெரேரா மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.எதிர்க்கட்சி எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா மற்றும் தமிழ் கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களும் ஆதரித்து வாக்களித்தனர்.




