யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

Date:

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன.

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்