போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்!

Date:

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கலந்துகொண்டார்.

பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சார்ஜன்ட் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்