ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: 3 பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

Date:

ரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் கேகாலை பொலிஸ் பிரிவின் பல உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (19) ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தற்போது, கேகாலை மற்றும் ரம்புக்கன பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கேகாலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அத்தியட்சகர் (SP) மற்றும் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ளவும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் சாட்சிகள் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடாமல் கலந்துகொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 (1) விதியின் கீழ் கேகாலை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பொலிஸாருக்கு ஆதரவளிக்க இலங்கை இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளை (22) நாரணபத்தவில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்