வியாஸ்காந்த் அபாரம்: கொழும்பை சுருட்டியது யப்னா கிங்ஸ்!

Date:

எல்.பி.எல் தொடரின் 17வது ஆட்டமாக இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்யை 102 ஓட்டங்களால் சுலபமாக தோற்கடித்தது யப்னா கிங்ஸ் அணி. இன்று  ஆட வாய்ப்பு பெற்ற விஜயகாந் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நாணயச்சுழற்சியில் வென்ற யப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான டாம் கோலர்-காட்மோர் 92 , உபுல் தரங்கா 37 ஓட்டங்களை பெற, 193/5 என்ற வலுவான நிலையை அடைந்தது.

பந்துவீச்சில் நவீன்-உல்-ஹக் 27 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

பதிலளித்து ஆடிய கொழும்பு ஸ்டார் அணி, சீராக விக்கெட்டுக்களை இழந்தது. ரொம் பான்டன் மட்டுமே 30 ஓட்டங்கள் எடுத்தார். கொழும்பு அணி 15.5 ஓவர்களில் 91 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.

யாழ் அணியின் பந்து வீச்சில், கிங்ஸின் ஜெய்டன் சீல்ஸ் 13 ஓட்டங்களிற்கு 4 விக்கெட், விஜயகாந்த் வியாஸ்காந்த் 32 ஓட்டங்களிற்கு 3 விக்கெட், மகேஷ் தீக்ஷன 25 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் டாம் கோலர்-காட்மோர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்