மேலும், 21 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.
நேற்று -டிசம்பர் 15 ஆம் திகதி- இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,698 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மரணித்தவர்களில் 12 ஆண்களும் 9 பெண்களும் மரணித்துள்ளனர். 2 ஆண்களும் 5 பெண்களும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
10 ஆண்களும் 4 பெண்களும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.



