திடீரென தீப்பற்றிய வீடு: ஒரே குடும்பத்தில் ஐவர் உடல் கருகி பலி (PHOTOS)

Date:

நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர்.

தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோரே இவ்வாறு தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆர்.ராமையா (55 ), அவரின் மனைவியான முத்துலெட்சுமி (50), இவர்களின் மகள் டிவனியா (35), டிவானியாவின் பிள்ளைகள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மகனான ரவீந்திரன் (30) உயிர்தப்பியுள்ளார். மேற்படி மகளின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பல கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்