போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

Date:

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை நேற்று சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற அவரை  உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு...

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்