கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 ஆண்களும் 20 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,195 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 299,366 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,349 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 270,356 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,678 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



