யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

வேலை தேடி கொழும்பு வந்த சிறுவனின் பணப்பை, கைபேசியை திருடர்களிடம் பறிகொடுத்த பின்னர், கொழும்பில் வீதியோரங்களில் தூங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து சிறுவன் அழைக்கப்பட்டுள்ளார். எனினும், அழைத்தவர்கள் அச்சிறுவனை வந்து கூட்டிச் செல்லவில்லை. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக அச்சிறுவன் வீதியோரங்களில் தூங்கி  இரவுகளை கழித்துள்ளார்.

அவருடைய ​பணப்பை, தேசிய அடையாள அட்டை மற்றும் அலைபேசி ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை பகிர்ந்து, சிறுவனின் உறவினர்களின் கவனத்திற்கு தகவலை கொண்டு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்: தமிழக முதல்வர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்...

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்