மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

Date:

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.

தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவியுள்ளன.

சந்தேகநபரைத் தவிர, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இல்லாத காரணத்தினால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கலாக மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய ஊடக அறிக்கைகளின்படி, மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பணமோசடி தடுப்புப் பிரிவு (AMLA) ஆகியவற்றின் புலனாய்வு மற்றும் பொதுமக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே 38 வயதுடைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளானவராக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிவரவுத் தலைமைப் பணிப்பாளர் டாதுக் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்புகள் மற்றும் பணி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணிபுரிவதற்காகவே பாதிக்கப்பட்ட பெண் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சம்பளம் வழங்கப்படாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், போதிய உணவு வழங்கப்படாமல் அவரது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தலாக உடலிரீதியான வன்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இந்த நடவடிக்கையின் மூலம், கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு ஆளானவர் என அடையாளம் காணப்பட்ட ஒரு இலங்கைப் பெண் மீட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் ஊதியம் இன்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், போதுமான உணவு வழங்கப்படவில்லை என்றும், அவரது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலின் ஒரு வடிவமாக உடல்ரீதியான வன்முறைக்கு ஆளானதாகவும் நம்பப்படுவதாக ஜகாரியா கூறினார்.

அதேநேரம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் இல்லாததால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் முன்னாள்...

கட்டாயம் பிரசுரித்து தரவும். நன்றி : அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியாளர்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்