மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

மட்டக்களப்பு  பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்து ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்தியான 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவருக்கு 7  வருட கடூழிய சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா அபராதம்  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்

குறித்த பிரதேசம் ஒன்றில் குறித்த சிறுமியின் தாயார் இல்லாத நிலையில் அவரது தந்தையார் 2 வதாக 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவரை திருமணம் முடித்துக் கொண்ட இவர் கணவரின் முதல் மனைவியின் 9 வயது சிறுமியை  கடந்த 2015 மார்ச் 10 ம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10 ம் திகதியான ஒரு வருட காலத்தில் தொடர்ச்சியாக இரும்பு கரண்டியால் சூடு வைத்து மற்றும் வாயில் துணியை அடைத்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் சித்தியை 2016 பொலிசார் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு 2022ம் ஆண்டு  மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த  நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி  தொடர்ந்து வாதாடி வந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் 2026 ம் ஆண்டு  ஒக்டோபர் 13 திகதி (2026-10-13) இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு  அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு முதலாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும்  இரண்டாவது குற்றத்துக்கு தலா ஒரு குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் மூன்றாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம்  அபராதமும் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் குறித்த தண்டனையை சமகாலத்தில் செயல்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்! களுத்துறையில் 6 பேர் கைது!

களுத்துறை–கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில், சொகுசு பேருந்தொன்றை மோட்டார்...

இந்தியாவை உலுக்கிய அர்னாப் புயல்! 6 பேர் பலி; 15,000 மின்கம்பங்கள் சேதம்!

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய அர்னாப் புயலால் குறைந்தது ஆறு...

நிந்தவூரில் நாளை முதல் கோழி இறைச்சி விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்-மீறினால் சட்ட நடவடிக்கை

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்