தெற்கு அந்தமான் கடற்பகுதியில், வடக்கு சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் இன்று முதல் வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் தாழ்வுநிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த கடற்பகுதியில் கடற்பணிகளில் ஈடுபடும் கடற்படையினரும் மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயற்படுமாறும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




