யாழ் மாவட்டத்தில் கிராமிய வயல்கள் மற்றும் அதுசார்ந்த குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன பிரதி இராஜாங்க அமைசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய பாடல்கள் மற்றும் அதுசார்ந்த குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரட்ன கலந்து கொண்ட கலந்துரையாடலில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சினால் வடமாகாணத்தில் குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பு என 8 வேலைத் திட்டங்களுக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 4 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஆழங்குளம், முதலியார் குளம்,பினாக்கன் குளம், மற்றும், வழுக்கி ஆறு புனரமைப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் 50 வீதத்தை எட்டியுள்ளதாக சுட்டி காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் ,யாழ்மவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,
உதவி அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் வி. பிறேம்குமார், யாழ்மாவட்ட கமநல சேவைகள் ஆணையாளர் எஸ் நிஷாந்தன், யாழ் மாவட்ட உதவிவிவசாய பணிப்பாளர் திருமதி. கைலேஸ்வரன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.