24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
உலகம்

கொரோனா பலி பிரேசிலில் 4,50,000-ஐ தாண்டியது!

பிரேசிலில் கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,50,000-ஐ தாண்டியது.இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 73,453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,194,209 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,173 பேர் பலியாக கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,52,031 ஆக அதிகரித்துள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஜனவரி முதலே கொரோனா அதிகரித்து வந்தது. சில நாட்கள் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு பிரேசிலில் அதிகரித்துள்ளது. பிரேசிலில் இதுவரை 18% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment