2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

Date:

லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, 2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் தொடர்பாக நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. உலகளாவிய ஊடகங்கள் இதுகுறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

காட்டுத்தீ காரணமாக ஒஸ்கர் விருது விழாவை ரத்து செய்யவேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், விருது வழங்கும் விழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

முன்னதாக, விருதுகளுக்கான வேட்புமனு அறிவிப்பு நேற்றைய தினம் (18) வெளியிடப்படவிருந்த நிலையில், அதனை ஜனவரி 23 வரை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

97வது அகடமி விருதுகள் அல்லது ஒஸ்கார் விருதுகள் வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து, விழா ரத்து செய்யப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்