சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

Date:

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது – 02, ஒராபிபாஷா வீதியில் வசித்து வந்த 5 பிள்ளைகளின் தாயாரான அலியார் முகம்மது முகைதின் றம்ஸானா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (15) வீட்டிலிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இவர், உடனடியாகக் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பதில் நீதிவானின் கட்டளைக்கமைய  சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எஸ்.எம் றியாஸ்டீன்  தலைமையில் மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன. உடற்கூற்று பரிசோதனையின் போது, தீக்காயங்களினால் ஏற்பட்ட தீவிர பாதிப்பு காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் காரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மெக்கா மீதான ஹூதிகளின் ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கு பரவலான எதிர்ப்பு

மெக்காவை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியை சவூதி...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்